எங்கே இருந்தாய்...........


படம் : தெனாவட்டு
இசை: ஸ்ரீகாந்தேவா

பாடியவர்: ஹாரிஸ் ராகவேந்திரா






எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


உன்னை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தில் பொம்மையடி
உன்னை பார்த்த பின்பு நான்
பால்நிலவின் வண்ணமடி

தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில் சாயும் போது
தாயும் நீயடி


எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

அஹா ஹா ந நா ஹா யா யா யா ஹா

என் வீட்டுத் தோட்டத்தில்
பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆளின்றி
செடியில் உதிருமடி

உன்னை நான் பார்த்தவுடன்
உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல்
பறித்திட போகுதடி


என் இதயம்… முழுதும்….
விதையாய்…. விழுந்தாய்….
வேரும் விதையென்று
விட்டு விட்டு சென்றாய்…
வெளிச்சத்தை போலே
நீ வளர்ந்து நின்றாய்….

தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில் சாயும் போது
தாயும் நீயடி


எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


என் பெயரை கேட்டாலே
உன் பெயரை சொல்கின்றேன்
எப்போதும் என் நினைவு
உன்னை சுற்றுதடி

எதிரே யார் வந்தாலும்
நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில்
மின்னல் வெட்டுதடி


உயிரில்…. கலந்தாய்…..
உணர்வில்….. நுழைந்தாய்…..
எந்தன் வீடு என்று
என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின் வந்து தொடர்கிறதே

தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில் சாயும் போது
தாயும் நீயடி


எங்கே இருந்தாய்
எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய்
நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


உன்னை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தில் பொம்மையடி
உன்னை பார்த்த பின்பு நான்
பால்நிலவின் வண்ணமடி

தோளில் சாயும் போது
தோழி நீயடி
மடியில் சாயும் போது
தாயும் நீயடி





கருத்துகள் இல்லை: