படம் - குட்டி
இசை: தேவிஸ்ரீபிரசாத்
ஹே ஈஸ்டு வெஸ்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைபே ஜாலிதான்
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைபே ஜாலிதான்
ஹேய் ஹார்ட் கோல்டு, சுவீட்டு சால்ட்டு
எதுவுன்னாலும் பாரு டேஸ்டு
திட்டம் போட்டு வாழாதே லைபே ஜாலிதான்
ஹே எக்ஸாம்நேசன் அடிக்கடி டியூஷன்
எல்லாமே போனால் ஜாலிதான்
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
ஹேய் கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
குட இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்
அடிக்கடி மனச தெறந்தா ஜாலிதான்
அட ஜாலிதான் மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்
அரும்பாக மீசை வரும்போது
விரலாலே மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோஷம் ஜாலிதான்
மிளகாயப்போல பேசாம
மெதுவாக அன்பா நீப்பேசு
கொலைகாரன்கூட கொழந்தைன்னா ஜாலிதான்
கராத்தே கும்க்பு தெரிகிறபோதும்
நண்பனிடம் தோத்தா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹே.. தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான்
ஹேய் இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்
ஹே ஈஸ்டு வெஸ்டு நார்த்து சௌத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைபே ஜாலிதான்
பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உன்னதில்ல
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறுப்பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிடா
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தா ஜாலிதான்
ஹே.... லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான்
அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான்
டா டா டா
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக