முதல் மழை என்னை.........


படம்: பீமா
பாடியவர்: ஹரிகரன்
இசை: யுவன் சங்கர் ராஜா  





ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ….. ஹோய்
இதமாய் மிதந்ததே….

பெண்:  முதல் மழை நம்மை நனைத்தே….
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே….
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே……
இதயமும்…ம்ம்….
இதமாய் மிதந்ததே….

மெஹூ மெஹூ மெஹூ

ஆண்:  கனவோடுதானடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்.
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்


பெண்:  எதுவும் புரியா புதுக்கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்…
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்…
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்…


ஆண் : முதல் மழை என்னை நனைத்ததே…
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே.
இதயமும் ….. ஹோய்
இதமாய் மிதந்ததே….


பெண்:  ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்
என்வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓஒ……ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளில் நீளம் போதவில்லை


ஆண்:  இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிருன்னுள்ளே உந்தன் நெருக்கம்
இருந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இருந்தாலுமே என்றும் இருக்கும்.


பெண் : உஹாகு ஆகியா உஹாகு உஹாகு ஆகி ஆகியா

ஆண்:  பெயரே தெரியாத பறவை அழைத்ததே….

பெண்:  உஹாகு ஆகியா உஹாகு உஹாகு ஆகி ஆகியா

ஆண்:  இதயமும்…ஹோய்….இதமாய் மிதந்ததே….

பெண்:  மெஹூ மெஹூ மெஹூ…

கருத்துகள் இல்லை: