செம்மொழியே செம்மொழியே.........




படம்: வல்லக்கோட்டை
இசை: தீனா
பாடியவர்கள்: பத்மபூஷன் பாலுஜி, டாக்டர்.எஸ்.ஜானகி





செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே
உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

தேன் தேன் தேன் பூவான தீயானேன்
பூவே பூவே பூவே தீயானால் பூவானேன்
பூப்போல நீயாய்
பூப்போல பூவாய்
தீயின் சுடரை பூவின் இதழாய் நானேன்
பூவின் இதழின் தீயின் சுடராய் நானேன்
இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ
(செம்மொழியே.....)


தேடும் தேடும் தேடும் நான் தேடும் உயிர் நீ தான்
வாழும் வாழும் வாழும் நான் வாழும் உடல் நீ தான்
என்னோட நெஞ்சம்
உன்னோடு கொஞ்சும்
காற்றானாலும் உந்தன் மூச்சு காற்றாவேன்
ஓஓஓஓ பொட்டானாலும் உந்தன் நெற்றில் பொட்டாவேன்

செம்மொழியே செம்மொழியே நீ தானே
உன் செந்தமிழே செந்தமிழே தேன் தானே

உன் அங்கத்திலே சங்கத்தமிழ் விளையாடும்...ம்...
உன் கன்னத்திலே கன்னித்தமிழ் அலைபாயும்

ஓஓஓஓ இதழ் இதழ் இதழ் இதழ் வரிகள் கம்பன் செய்த கவியோ
இடை இடை இடை இடைவெளிகள் அய்யன் செய்த குறளோ

கருத்துகள் இல்லை: