படம் : எந்திரன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன், ஷ்ரேயா கௌஷல்
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?
ராஜாத்தி பூலோகத்தில்
ஆசை தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!
உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
பெண் உள்ளம் உன்னைக் கெஞ்சிற்றே!
நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமமுற்ற கணினி னான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம் நான்
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
மேகத்தை உடுத்தும் மின்னல் தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே!
வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவென்னாதே
ஏ ஏழாம் அறிவே!
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் – நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நான் என்றாய்!
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
இவன் உலகம் தாண்டி உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
அரிமா அரிமா – நானோ
ஆயிரம் அரிமா – உன்போல்
பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா?
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா எந்திரா எந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக