என் காதல் சரியோ .........


படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: கேகே





என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோம் பிடித்தோம் அடித்தோம் அணைத்தோம்
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

நான் தந்த பூவை எல்லாம் வீசும்போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும்போது Feel my love
என் வீடு தெரியும் ஜன்னல் மூடும்போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும்போது Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அதுகூட கோபமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லைப்போல
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்..)

கைவிசிறி போலே உன் கை தீண்டும்வரவேண்டாம்
மின்விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பணிரெண்டு மணி முள்ளை போல சேர ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love Feel my love
Feel my love Feel my love
(என் காதல்…)

கருத்துகள் இல்லை: