காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி..........



படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், அனுராதா ஸ்ரீராம்





காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஹோ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


ஈக்கி மின்னல் அடிக்குதடி ...யாத்தே
ஈரக்கொல துடிக்குதடி ... யாத்தே
ஈக்கி மின்னல் அடிக்குதடி ... யாத்தே
ஈரக்கொல துடிக்குதடி ... யாத்தே

நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியில வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எழும்புக பல்பொடியாச்சே


காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


தண்ட அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு

வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெரும் மூச்சு


காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

உச்சந்தல வகுட்டுவழி ஒத்த மனம் அலையிதடி
உதட்டு வழிப் பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்கிதடி
பாழாப்போன மனசு பசியெடுத்து
கொண்டப் பத்தியத்தை முறிக்கிதடி
பாராங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தை குட்டிநகருதடி
கொண்டை காலு செவப்பும் மூக்கு வனப்பும்
என்னை கிறுக்குன்னு சிரிக்கிதடி

காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


தண்ட அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்
வாங்குதே பெரும் மூச்சு


ஏ ஹே
ஏர் கிழிச்ச தடத்து வழி நீ கிழிச்சி போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி எம்பொழப்பு
ஊராங்காட்டு கனியே ஒன்ன நெனச்சு

நெஞ்சு சப்புகொட்டித் துடுக்குதடி
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்தி சண்ட நடக்குதடி
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி

ஒ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ


ஒ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ


ஏ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ

காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ

காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ

காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ......


கருத்துகள் இல்லை: