படம்: மேட்டுக்குடி
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிப்போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
(அடி..)
பனிரோஜா தோட்டம் தான் *
ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று
என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
(அடி..)
என் சேலைச் சோலைக்குள்
முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல்
நீ அள்ளிக் குடித்தாயே
முதல் பார்வையிலே என்னை
நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும்
நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா
அட இன்னும் தெரியலையா
நான் உந்தன் துணை இல்லையா
(அடி..)
ஒரு சிற்பியில் முத்தை போல்
என்னை மூடிக்கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை
நீ தேடித் தருவாயா
உன் கனவில் நனைகின்றேன்
நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன்
நீ தலையணை ஆவாயா
நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகானா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா
அட போதும் அம்மம்மா
நாம் கைகள் இணைவோமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக