படம் : இரட்டை வால் குருவி
பாடகர்: ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
ராஜ ராஜ சோழன் நான்
என்னை ஆளும் காதல் தேசம் நீதான்பூவே... காதல்... தீவே....
மன்மீது சொர்க்கம் வந்து பெண்னாக ஆனதோ
உல்லாச பூமி இங்கு உண்டானததே......
கண்ணோடு கண்கள் ஏந்தும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம்...... என் காதல் வாகனம்.....
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி.......
(ராஜ ராஜ சோழன்...)
கள்ளூறப்பார்க்கும் பார்வை உள்ளாரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ரானி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே.... நீராடும் நேரமே.....
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ரானி....
(ராஜ ராஜ சோழன்...)
2 கருத்துகள்:
arumai vaalththukkal
ennai migavum kavarntha paadal ithu
எல்லோர் மனதிலும் மிகவும் ஆழமாக பதிந்த பாடல்
பாடலைப்பார்த்து உங்கள் கருத்தை சொன்னதற்கு மிகுந்த நன்றிகள்
கருத்துரையிடுக