அழகான இளமான் ஒன்று...........

 படம் : தென்காசி பட்டணம்
இசை : சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்கள் : சுஜாதா  














அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

 மயில்களும் குயில்களும்
வசிக்கின்ற வனத்தினில் 
மானுக்கு உறவில்லையோ
தனிமையில் தவிக்கின்ற
தருணத்தில் உதவிட
உறவுகள் வரவில்லையோ

அந்த சிட்டுக்குருவி கூட்டம்தான்
என்னை கட்டிக்காக்க வாராதோ
எட்டு திக்கும் சுற்றி திரியும்
குற்றால காற்றே  
எல்லோருக்கும் நீ போய் சொல்லு
நான் பாடும் பாட்டை

ஏ....அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று


லயத்தினில் சுரத்தினில் 
பிறக்கின்ற  பாட்டென்றும் 
பயத்தினில்  பிறப்பதுண்டோ
நிறுத்திட விரட்டிட
மெல்லிசை மாடத்தின்
கதவுகள் திறப்பதுண்டோ

ஒரு சட்டம் போட்ட மேகத்தை
மழை தொட்டுச் செல்ல முடியாது
ஆணை போட்டு ஆடச்
சொன்னால் ஆடாது அருவி
புன்னைக் குயிலும் மன்னன்
சொன்னால் பாடாது உருகி

அழகான இளமான் ஒன்று
அறியாத பயம்தான் கொண்டு 
இரு சிங்கம் இடையில் நின்று
இசை பாடும் நாள்தான் இன்று

நடு சாமம்மான இரவு
நடு காட்டில் காயும் நிலவு
தெரியாமல் இந்த நேரம்
தடம் மாறி வந்த பாவம்
அலை பாயும் நெஞ்சினோடு
ஆடாமல் ஆடுதம்மா
படும் பாடு யாவும் சொல்லி
பாடாமல் பாடுதம்மா

BY:- NISHA

கருத்துகள் இல்லை: