வண்ண தேரோடும்...........

படம்:- பாட்டாளி
இசை:- ராஜ்குமார்
பாடியவர்:- மனோ
பாடலாசிரியர்:- காளிதாசன்



வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே 
எங்கள் சந்தோசப் பாடலிலே  கும்மி கொண்டாடும் நேரமிதே 
மண மாலை உறவிலே மாயக்கண்ணன் வரவிலே 
ஒரு தாயும் சேயுமே நலம் கூடி வாழவே 
கனவுகள் மடியினில்  வளர்கிறதே

ஊர் பார்க்கவே என் பேர் சொல்லும்
முத்தொன்று சிற்பிக்குள் விளையாடுதே
நாளை வரும் நம் பிள்ளைதான்
என் தந்தை யாரென்று விடை கேட்குது
நீ போட்ட பாதையில் உன்னை இழந்தேன் 
பாசத்தில் நான் அங்கு என்னை இழந்தேன்
நிழலுக்கு பொட்டு வைத்து  நிஜத்தை விட்டு விட்டு 
மனதுக்கு கட்டுப் பட்டு மயங்கினேன் இங்கு நானடி
அடி பூங்கொடி..

வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே 
எங்கள் சந்தோசப் பாடலிலே  கும்மி கொண்டாடும் நேரமிதே

மேகங்களை கையால் அள்ளி
என் பிள்ளை கண் தூங்க மெத்தை செய்வேன்
ரோயாக்களை ஒன்றாக்கியே 
பூவுக்கு பூவாலே சட்டை நெய்வேன் 
வானத்து வின் மீது வண்ணம் எடுப்பேன்
மாணிக்க கண்கூச மாலை தொடுப்பேன்
 நிலவினில் தொட்டில் கட்டி நட்ச்சதிரத்தை வெட்டி
குழந்தைக்கு பொட்டு வைக்கும் சூர்யவம்சம்தானடி
அதுதானடி ..

வண்ண தேரோடும் பூமியிலே செல்ல தாயான பூமகளே 
எங்கள் சந்தோசப் பாடலிலே  கும்மி கொண்டாடும் நேரமிதே 
மண மாலை உறவிலே மாயக்கண்ணன் வரவிலே 
ஒரு தாயும் சேயுமே நலம் கூடி வாழவே 
கனவுகள் மடியினில்  வளர்கிறதே

BY :- NISHA

கருத்துகள் இல்லை: