மனசெல்லாம் மழையே நனைகிறேன் ..........

படம் :- சகுனி 
பாடல் :- மனசெல்லாம் மழையே 
பாடியவர்கள்  :- சோனு நிகாம் & சைந்தவி 
இசை :- ஜி .வி . பிரகாஷ்  குமார் 



மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே








அழகோ அழகு அவள்...........

படம் : சமர் 
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் :நரேஷ் ஐயர்
பாடல்வரிகள் : நா.முத்துகுமா


அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
கத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ சிக்-கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சர்க்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு...
அழகோ அழகு...


எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொன்னா... இல்லாத அழகு
மேலே கொஞ்சம் பார்க்க சொன்னா... பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ…
ஓ... ஓ... ஓ... ஓ...


காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்... தீராத அழகு
தள்ளி நின்று யோசிக்கையில்... வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்ததை என்ன சொல்லவோ…
ஓ... ஓ... ஓ... ஓ...


அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ
அய்... யய்.... யோ